அரசியல்

மக்கள் அச்சம்கொள்ளத் தேவையில்லை : அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

மழை காரணமாக மக்கள் அச்சம்கொள்ளத் தேவையில்லை என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மழை பாதிப்புகளை உடனுக்குடன் சீர்செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார். இன்னும் மழைபொழிவு தேவைப்படுவதாகவும், குடிநீர் ஏரிகளில் எல்லாம் தற்போதுதான் நீர் வந்து கொண்டிருக்கும் மகிழ்ச்சியான செய்தி கிடைப்பதாகவும் அவர் தெரிவித்தார். மத்திய அரசின் ஏற்பாட்டில் பேரிடர் மேலாண்மை,நீர் மேலாண்மை பற்றிய அனுபவங்கள் குறித்த மாநாடு நடைபெற்றதாகவும் அமைச்சர் உதயகுமார் கூறினார்.

Show More

Related News

Back to top button
Close