உலகம்

திடீரென பதவியை ராஜினாமா செய்த ரஷ்ய பிரதமர் 

ரஷ்ய பிரதமர்  டிமிட்ரி மெத்வதேவ்  திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதற்கான கடிதத்தை அதிபர் புதினிடம் அவர் வழங்கினார்.

பிரதமராக மெத்வதேவ் ஆற்றிய பணியை பாராட்டி, நன்றி தெரிவித்த அதிபர் புதின், மெத்வதேவின் நோக்கங்களை, பிரதமரின் கேபினட் நிறைவேற்றத் தவறிவிட்டது என தெரிவித்ததாக ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அதிபர் பாதுகாப்பு கவுன்சிலில், மெத்வதேவை அதிகாரியாக நியமிக்க புதின் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ரஷ்ய பிரதமர் மெத்வதேவின் ராஜினாமா குறித்த காரணங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. புதினுக்கு மிகவும் நெருக்கமான திமித்ரி மெத்வதேவ், 2012 முதல் ரஷ்யாவின் பிரதமராக பதவி வகித்து வந்தார். 2008 – 12ம் ஆண்டு வரை ரஷ்ய அதிபராகவும் அவர் பதவி வகித்துள்ளார்.

Show More

Related News

Back to top button
Close