அரசியல்

தங்களுடைய கட்சி எம்.எல்.ஏக்களை பாஜக இழுக்க முயற்சி : சிவசேனா பகிரங்க குற்றச்சாட்டு

தங்கள் கட்சி எம்.எல்.ஏக்களை இழுக்க பாரதிய ஜனதா முயற்சிப்பதாக சிவசேனா பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளது.

மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாரதிய ஜனதா 105 இடங்களையும், சிவசேனா 56 இடங்களையும் கைப்பற்றின. தேர்தல் முடிவுகள் வெளியாகி 10 நாட்களுக்கும் மேல் ஆன நிலையில், ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. சிவசேனாவின் முதலமைச்சர் பதவி பகிர்வு ஒப்பந்தத்தை பாஜக ஏற்காததே இதற்கு காரணம். தேசியவாத காங்கிரஸ் கட்சி சிவசேனாவுக்கு ஆதரவு அளிக்க இயலாது என தெளிவுபடுத்திவிட்ட நிலையில், தங்களுடைய கட்சி எம்.எல்.ஏக்களை பாஜக இழுக்க முயற்சிப்பதாக சிவசேனா பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் கட்டுரை வெளியாகியுள்ளது. அதில், “உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியைச் சேர்ந்தவர் முதலமைச்சராக வரவேண்டும் என மகாராஷ்டிரா மக்கள் விரும்புகின்றனர், ஆனால், சிலர் பணத்தை வைத்துக் கொண்டு சிவசேனா எம்.எல்.ஏக்களை இழுத்து வெற்றிபெற முயற்சிக்கிறார்கள் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது. முந்தைய அரசு பணத்தைக் கொண்டு புதிய அரசை அமைக்க முயற்சிப்பதாகவும், ஆனால், சிவசேனா கட்சியைச் சேர்ந்தவர் முதலமைச்சர் ஆக வேண்டுமென விவசாயிகள் விரும்புவதாகவும் அந்தக் கட்டுரையில் நேரடியாகவே குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Tags
Show More

Related News

Back to top button
Close