அரசியல்

நான் பிரதமர் ஆகிவிடுவேன் என மோடி பயப்படுகிறார் – சுப்ரமணிய சுவாமி

பிரதமர் மோடிக்கு பொருளாதாரம் புரியவில்லை என்று பா.ஜ.க. மூத்த தலைவரும் எம்.பி.யுமான சுப்ரமணியன் சுவாமி கூறியிருக்கிறார்.

இதுகுறித்து கருத்து கூறியுள்ள சுப்பிரமணிய சுவாமி, ரகுராம் ராஜன் ஆர்.பி.ஐ ஆளுநராக இருந்தபோது, வட்டி விகிதங்களை அதிகரித்ததால் நிதி மூலதன செலவு அதிகரித்ததாக கூறினார். பல்வேறு சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மூடப்படுவதற்கு ரகுராம் ராஜன்தான் காரணம் என்றும் அவர் குற்றம்சாட்டினார். “பிரதமருக்கு பொருளாதாரம் புரியவில்லை என்று குறிப்பிட்ட அவர், தான் பொருளாதார நிபுணர் மட்டுமல்லாது, அரசியல்வாதியாகவும் இருப்பதாக கூறினார். எனவே தம்மை நிதியமைச்சராக்க வேண்டும் என்று அவர் கூறினார். நிதியமைச்சர் பதவியில் தான் நன்றாக செயல்பட்டால் அடுத்து பிரதமர் பதவி கேட்பேன் என கட்சியினர் பயப்படுவதாக அவர் தெரிவித்தார்”. பொருளாதாரம் மோசமாக இருக்கும் நிலையில் வரி பயங்கரவாதம் ‘கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார். தற்போதைய போக்கு தொடர்ந்தால் வங்கிகளும், வங்கி சாரா நிதிநிறுவனங்களும் மூடப்பட்டு, பேரழிவிற்கு வழிவகுக்கும் எனவும் சுப்ரமணியன் சுவாமி எச்சரித்துள்ளார்.

Tags
Show More

Related News

Back to top button
Close