தமிழ்நாடு

தமிழர் திருநாளுக்கு தமிழக முதல்வர் மற்றும் ஆளுநர் வாழ்த்து!

தமிழர்களின் அறுவடைத் திருநாளாம், பொங்கல் திருநாளையொட்டி, ஆளுநர், முதலமைச்சர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டிருக்கும் வாழ்த்துச் செய்தியில், கொண்டாட்டம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை உள்ளடக்கிய பொங்கல் திருநாளின் தொடக்கமானது, அனைத்து குடும்பங்களுக்கும் மிகுதியான மகிழ்ச்சியையும், செழிப்பையும் அள்ளித்தர வாழ்த்துவதாக குறிப்பிட்டிருக்கிறார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருக்கும் வாழ்த்துச் செய்தியில், தமிழ்நாடு அரசு, வேளாண் பெருமக்களின் நல்வாழ்விற்காக செயல்படுத்தி வரும் திட்டங்களை பட்டியலிட்டுள்ளார். தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற்று சீரோடும், சிறப்போடும் வாழ்ந்திட வேண்டுமென்று வாழ்த்துவதாகவும் முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட தலைவர்களும் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

Show More

Related News

Back to top button
Close