உறவுகள்லைஃப் ஸ்டைல்

யாரெல்லாம் சிறந்த காதல் ஜோடிகள்!

அனைவரின் வாழ்விலுமே காதல் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. எல்லாருக்குமே வாழ்க்கையில் காதல் என்பது திருப்பு முனையாக இருக்கும். ஒருவரின் வாழ்க்கையை சரியான பாதையில் செலுத்துவதில் காதல் என்பது முக்கியபங்கு வகிக்கிறது. அந்த காதல் சரியான காதலாக அமைய வேண்டும் என்பதுதான் அனைவரின் ஆசையாகும்.

சரியான காதல் எது என்பதை தீர்மானிப்பதில் அனைவருக்கும் குழப்பம் இருக்கும். பர்பெக்ட்டான உறவுக்கான அளவுகோல் என்னவென்பதை உலகம் முழுவதும் பலரும் ஆராய்ச்சி செய்து கொண்டுதான் இருக்கின்றனர். ஒவ்வொரு ஜோடிகளும் வித்தியாசமாக இருந்தாலும், ஒரு உறவை வெற்றிகரமானதாக மாற்றத் தேவையான சில பண்புகளை அறிவியல் கணித்துள்ளது. இந்த பதிவில் பர்பெக்ட்டான காதலுக்கு இருக்கும் சில தகுதிகள் என்னென்னெ என்று பார்க்கலாம்.

வெற்றிகரமான தம்பதிகள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அவ்வளவாக சண்டையிடுவதில்லை. ஆனால் காலம் செல்ல செல்ல சண்டை குறைந்து காதல் மட்டுமே அவர்களுக்குள் நிறைந்திருக்கும்.

இந்த வகையான காதல் ஜோடிகள் உணர்ச்சிகளால் ஒன்றாக பிணைக்கப்பட்டிருப்பார்கள்.கூட்டத்துக்கிடையே இருக்கும் போது இருவருடைய கண்கள் மட்டுமே பேசிக் கொள்ளும்.

உடலளவில் தூரம் இருந்தாலும் மனதளவில் தனக்குள் இருப்பதாகவே எண்ணிக் கொள்வார்கள்.உண்மையான காதலர்கள் அன்பைத்  எப்போதும் எதையும் எதிர்பார்க்க மாட்டார்கள் உண்மையான தவிர.

வெற்றிகரமான காதலில் இருப்பவர்கள் ஒருவரை ஒருவர் ஊக்குவித்துக் கொள்வார்கள். ஒருவரின் சாதனையை நினைத்து மற்றவர்கள்  பெருமைக்கொள்வார்கள். ஒருவருக்குள் இருக்கும் சிறந்த குணத்தை மற்றொருவர் வெளிக்கொண்டுவர துணையாக இருப்பார்கள்.

இக்காலத்தில் இருக்கும் காதல் ஜோடிகளுக்கு பெரும்பாலும் தனது காதலரின் நண்பர்களை அவர்களுக்கு பிடிக்கவே பிடிக்காது அவர்களிடம் இருந்து விலகுமாறு காதலர்களிடம் சண்டை போடுவார்கள்.

ஆனால் எவர் ஒருவர் உங்கள் நண்பர்களை தனது நண்பராகவும் சகோதர சகோதரியாகவும் எண்ணுகிறார்களோ அவர்கள் உங்களையும் உங்கள் நட்பையும் உண்மையாக புரிந்துக்கொள்வார்கள்.

தங்களுக்குள் எத்தனை கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், எந்த சூழ்நிலையிலும் ஒருவரை ஒருவர் அவமதித்துக் கொள்ள மாட்டார்கள். ஒருவர் மீது ஒருவர் எப்பொழுதும் அன்பும், மரியாதையும் வைத்திருப்பார்கள்.

காதலர்கள்  இருவருக்குமே அவரவர் கடந்த காலம் முழுவதுமாக தெரிந்திருக்கும். சரியான காதலில் இருப்பவர்கள் தங்கள் துணையின் கடந்த காலத்தைப் பற்றி சிந்திக்காமல் நிகழ்காலத்தை எப்படி மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வது என்பது பற்றி சிந்திப்பார்கள்.

மொத்ததில் தனது துணை எவ்வளவு தொலைவு சென்றாலும் அந்த துணையின் நினைவு மட்டுமே எந்நேரமும் தனக்குள் ஓடிக்கொண்டிருப்பவராக இருப்பார்கள். தனது துணையின் வருகைக்காக நெடுங்காலம் காத்திருப்பவர்களாகவும் இருப்பார்கள்,இவர்களே ஃபெர்பெக்ட் ஜோடி.

Show More

Related News

Back to top button
Close