அரசியல்

மறைமுக தேர்தல் எதிர்த்து திருமாவளவன் எம்.பி. வழக்கு

உள்ளாட்சித் தேர்தலில் மேயர் உள்ளிட்ட நகராட்சி உயர்பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்துவதை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், சிதம்பரம் தொகுதி எம்.பி.யுமான திருமாவளவன் வழக்கு தொடர்ந்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், உள்ளாட்சித் தேர்தலில் மேயர் உள்ளிட்ட நகராட்சி உயர் பதவிகளுக்கு மறைமுகத்தேர்தல் கொண்டு வந்துள்ள தமிழக அரசின் அவசர சட்டத்திற்கு தடை விதிக்க கோரியுள்ளார்.

மேலும், மாநகராட்சி மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர் போன்ற பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடத்த வேண்டும் என அரசியல் சாசனம் கூறவில்லை எனவும், மறைமுகத் தேர்தல் குறித்த அவசர சட்டம், அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது எனவும் மனுவில் அவர் தெரிவித்துள்ளார். மாநகராட்சி, நகராட்சிக்கு நேர்முகத்தேர்தல் தான் நடத்த வேண்டும் எனவும் மனுவில் திருமாவளவன் கோரியுள்ளார்.

Show More

Related News

Back to top button
Close