தமிழ்நாடு

கனமழையால் வான் போக்குவரத்தும் பாதிப்பு !

தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக மதுரைக்கு செல்ல வேண்டிய இரண்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக  சாலைகளில் நீர் தேங்கியும், குண்டும் குழியுமாகவும் இருப்பதால் தரைப் போக்குவரத்து வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வான் போக்குவரத்தும் பாதிப்படைந்துள்ளது. பெங்களூருவில் இருந்து மதுரைக்கு காலை 7.15 மணிக்கு வரவேண்டிய இண்டிகோ விமானமும், ஹைதராபாத்திலிருந்து மதுரைக்கு காலை 7. 40 மணிக்கு வரவேண்டிய ஹைதராபாத் இண்டிகோ விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் மதுரையிலிருந்து பெங்களூர் மற்றும் ஹைதராபாத் செல்ல வேண்டிய 50 க்கும் மேற்பட்ட பயணிகள் மதுரை விமான நிலையத்தில் காத்திருந்தனர்.

Show More

Related News

Back to top button
Close