தமிழ்நாடு

குடியுரிமை சட்டத் திருத்த நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின் கைது

குடியுரிமை சட்டத் திருத்த நகலை கிழித்து எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா, குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சைதாப்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட திமுக இளைஞரணியினர், குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கிழித்து எரிந்தும், தீயிட்டு கொளுத்தியும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அப்போது, மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். பின்னர் அண்ணா சாலையில் பேரணியாக சென்று திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதனை தடுத்த காவல்துறையினருக்கும், திமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட முயன்ற உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Show More

Related News

Back to top button
Close