
கோத்தபய ராஜபக்சவை ஏன் இந்தியாவிற்குள் அனுமதித்தீர்கள் என மாநிலங்களவை துணை சபாநாயகருடன் வைகோ கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்
டெல்லியில் நடைபெற்று வரும் குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நேற்று நடந்த விவாதத்தில் துணை சபாநாயகருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதில், புதின், டிராம்ப், ஜின்பிங் ஜிங் போன்ற வெளிநாட்டு தலைவர்களை பிரதமர் மோடி சந்திப்பதை வரவேற்ற அவர்,, அதன் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆக்கபூர்வ நடவடிக்கைகள் குறித்து அவையில் விளக்கம் தருவாரா என்று கேள்வி எழுப்பினார். அதன் மூலம் இந்தியாவிற்கு கிடைத்த பயன்கள் குறித்து அறிந்துக்கொள்ள ஆவலாக உள்ளேன் என்றும் வைகோ தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், இலங்கை உள்நாட்டு போரில் லட்சக்கணக்கன தமிழர்களை கொன்று குவித்த, கோத்தபயவை ஏன் இந்தியாவிற்குள் அனுமதித்தீர்கள் என, துணை சபாநாயகருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இலங்கை சென்ற வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், கோத்தபயவை இந்தியவிற்கு வருமாறு அழைப்பு விடுத்ததற்கும் கடும் கண்டனம் தெரிவித்த வைகோ,. சிங்களர்களின் வாக்குகளை பெற்றதால் மட்டுமே அதிபர் ஆனேன், என கோத்தபய ரஜபக்ச கூறியதை சுட்டிகாட்டி தனது கடும் கண்டனத்தை பதிவு செய்தார்.