தமிழ்நாடு

மது ஒழிப்பு போராளி, வைகோ தாயாரின் நினைவு தினம்….

நெல்லை மாவட்டம் கலிங்கப்பட்டியில் வைகோவின் தாயார் மாரியம்மாளின் நான்காம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

தள்ளாத முதிர்ந்த வயதிலும், சமூக அக்கறையுடன், வைகோவின் தாயார் சமூக நலனுக்காக வீதியில் வந்து போராடி வெற்றிகண்ட போராளியாவார். கலிங்கப்பட்டி மட்டுமல்லாமல் சுற்றுப்பட்டி மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர் வைகோவின் தாயாரான மாரியம்மாள். மூன்று வருடங்களுக்கு முன்பு கலிங்கப்பட்டியில் அரசு டாஸ்மாக் கடை திறந்ததை அவர் கிராம மக்களோடு எதிர்த்தார். மக்களின் எதிர்ப்பையும் மீறி மதுக்கடை திறக்கப்பட்டதால் அதை மூட வேண்டும், மக்களுக்கு கேடு விளைவிக்கும் மது கூடாது என்று ரோட்டிற்கு வந்து போராடினார் மாரியம்மாள். நடை தள்ளாடும் முதுமை நிலையையும் லட்சியப் படுத்தாமல் வீதிக்கு வந்ததால், அவர் பின்னால் கலிங்கப்பட்டி கிராமமே திரண்டு போராடியது. மூன்று நாள் போராட்டத்திற்குப் பிறகு மக்களின் ஆவேசம் பீறிட மதுக்கடை சூறையாடப்பட்டது. பின்னர் கலிங்கப்பட்டி டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.  அந்த சம்பவத்திற்குப் பின்னர் முதுமை காரணமாக கடந்த 2015-ம் ஆண்டு மாரியம்மாள் காலமானார் . அவரது 4-ம் ஆண்டு நினைவு நாளான இன்று, அவரது கலிங்கப்பட்டி இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்களவை எம்.பி.யுமான வைகோ, அவரது சகோதரர் ரவிச்சந்திரன் மற்றும் ஊர் பொது மக்கள் மலரஞ்சலி செலுத்தினர்.

Tags
Show More

Related News

Back to top button
Close