அரசியல்

மகிழ்ச்சியூட்டும் காலத்தை உருவாக்க உறுதி ஏற்போம் என வைகோ அழைப்பு!

இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், தன்னை வருத்தி, வியர்வை சிந்தி, உழுது பயிரிட்டு, உழவர்கள் விளைவித்துத் தருகின்ற தானிய மணிகள்தான் உலகை வாழ்விக்கின்றன அதனால்தான் வள்ளுவப் பெருந்தகை,

“சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழன்றும் உழவே தலை”

வேளாண் பெருங்குடி மக்கள் தாங்கள் உயிராகப் போற்றும் நிலத்திற்கும் கால்நடைச் செல்வங்களுக்கும், நன்றி பாராட்டுகின்ற வகையில் தைப்பொங்கல் திருநாளைக் கொண்டாடி மகிழ்கின்றோம் உழவர்கள் மட்டும் அல்ல ஆயிரமாயிரம் ஆண்டுகளாக சாதி, மத எல்லைகள் அனைத்தையும் கடந்து தமிழர்கள் அனைவரும் தைப்பொங்கல் திருநாளைக் கொண்டாடுகின்றனர் அரிசியும் சர்க்கரையும் நெய்யும் கலந்து புதுப்பானையில் இட்டுப் பொங்கி வரும் வேளையில், பொங்கலோ பொங்கல் என்று குலவை இட்டுக் குதூகலித்து தன் இல்லத்தாருடன் பகிர்ந்து உண்ணுவார்கள்

கடந்த ஆண்டு தமிழகத்தில் சில பகுதிகளில் பெருமழையும், சில பகுதிகளில் வறட்சியுமாகக் கழிந்தது. கையில் இருக்கின்ற பணத்தை முதலீடு செய்து, கடன் வாங்கிய விவசாயிகளின் பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படவில்லை பல இடங்களில் காப்பீட்டுத் தொகைக்குப் பிரிமியம் கட்டியும், ஈட்டுத்தொகை வழங்கப்படவில்லை. மதுவின் பிடியிலும், இலவசங்களின் போதையிலும், தமிழகத்தின் இளைய தலைமுறை பாழாகி வருகிறது. உற்பத்திச் செலவில் 50 விழுக்காடு லாபமாகத் தரவேண்டும் என்ற வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனின் அருமையான திட்டத்தை, மத்திய மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும் நொறுங்கிக் கிடக்கும் விவசாயிகளின் வேதனையைத் தீர்க்க முன்வருவதுடன், அவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் புதுவாழ்வு தரவேண்டும். எவ்வளவு மனச்சுமைகள் இருந்தாலும் அவற்றை எல்லாம் மறந்துவிட்டு, நம்பிக்கையோடு தைப்பொங்கலைக் கொண்டாடி வருகின்ற தமிழக மக்களுக்கு, மகிழ்ச்சியூட்டும் காலத்தை உருவாக்க, அனைவரும் உறுதி ஏற்போம் என வைகோ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Tags
Show More

Related News

Back to top button
Close