தேசம்

ரயில் பெட்டிகள் தயாரிப்பில் ஊழல் : விசாரணையை தீவிரப்படுத்தும் அதிகாரிகள்

வந்தே பாரத் ரயில் பெட்டிகள் தயாரிப்பில் ஊழல் நடந்ததாக எழுந்த புகார் தொடர்பான விசாரணையை, ரயில்வே லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட, வந்தே பாரத் எனப்படும் ரயிலை கடந்த பிப்ரவரி மாதம் பிரதமர் மோடி டெல்லியில் தொடங்கி வைத்தார். இதனிடையே வந்தே பாரத் ரயில் பெட்டிகள் தயாரிப்பதற்காக கோரப்பட்ட ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாக புகார் எழுந்தது. இந்த புகாரை விசாரித்து வந்த ரயில்வே லஞ்ச ஒழிப்பு போலீசார், தற்போது ஆவணங்கள் அடிப்படையில் விசாரணயை தீவிரமாக்கியுள்ளனர். இதைதொடர்ந்து வந்தே பாரத் ரயில் பெட்டிகள் தயாரிப்பின் போது, பணியில் இருந்த அதிகாரிகளுக்கு கேள்விகளை அனுப்பி விளக்கம் பெற்றுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Show More

Related News

Back to top button
Close