விடாமல் விரட்டும் டெங்கு காய்ச்சல் : சிறுவன் உயிரிழப்பு

வேலூரில் டெங்கு காய்ச்சல் காரணமாக சிறுவன் ஒருவன் உயிரிழந்தான்.
வேலூர் மாநகராட்சியில் காகிதபட்டறையில் பள்ளத்தெருவை சேர்ந்த யுகேஜி படிக்கும் அபினேஷ் என்ற சிறுவனுக்கு சில நாட்களாக காய்ச்சல் இருந்து வந்தது. இந்நிலையில் காய்ச்சல் அதிகமானதை அடுத்து சிறுவனை அவரது பெற்றோர் வேலூர் சி எம் சி மருத்துவமனையில் அனுமதித்தனர். சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் டெங்கு காய்ச்சல் இருப்பதை உறுதி செய்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அபிஷேக் இன்று காலை உயிரிழந்தான்.