ஆரோக்கியம்லைஃப் ஸ்டைல்

விட்டமின் ஈ குறைவதால் ஏற்படும் பாதிப்புகள்

விட்டமின் ஈ என்பது நமது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களில் மிக முக்கியமான ஒன்றாகும். இது தான் நமது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்க பயன்படுகிறது. மேலும் இரத்த சிவப்பணுக்கள் உருவாக, இரத்தம் உறைவ தை தடுக்க பெரிதும் பயன்படுகிறது.

இந்த விட்டமின் இயல்பாகவே கொழுப்பில் கரையக் கூடியது. இதை நாம் இயற்கையாகவே சில உணவுப் பொருட்களில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். இதன் மூலம் விட்டமின் ஈ பற்றாக்குறையை போக்கி ஆரோக்கியத்தை பராமரிக்க முடியும்.

விட்டமின் ஈ யில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்கள் உடம்பில் உள்ள ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைக்கிறது. மேலும் நோய்கள் நம்மை தாக்க வண்ணம் பாதுகாக்கிறது.

அட்டாக்ஸியா என்பது மூளை, தசை மற்றும் நரம்பில் ஏற்படும் ஒருவகை ஒருங்கிணைப்பு கோளாறு ஆகும். இந்த நோயை விட்டமின் ஈ சத்துக் கொண்டு சரி செய்யலாம். இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்கள் அட்டாக்ஸியா மற்றும் டிஸ்ப்ராக்ஸியா போன்ற ஒருங்கிணைப்புக் கோளாறுகளைத் தடுக்க உதவுகிறது.

புரோலாக்டின் ஹார்மோன் அதிகமான சுரப்பு அல்லது புரோலாக்டின் சமநிலையின்மை காரணமாக மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அறிகுறிகளை போக்குகிறது. இது அந்தக் காலத்தில் ஏற்படும் ஹார்மோன் சமநிலையின்மையை சரி செய்கிறது.

உயர் இரத்த அழுத்தம் சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால் விட்டமின் யில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்கள் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்துகிறது.

கிரானுலோமா அன்யூலேர் என்பது சருமத்தில் அழற்சி காரணமாக சிவந்து போய் கொப்புளங்கள் தோன்றும். அந்த பகுதியில் நீங்கள் விட்டமின் ஈ எண்ணெய்யை தேய்த்து வந்தால் சரி ஆகி விடும். விட்டமின் ஈ ஏகப்பட்ட சரும பிரச்சனைகளை போக்குகிறது.

நிலையற்ற மூலக்கூறுகள் கண் திசுக்களை உடைத்து கண் பார்வை திறனை குறைக்கிறது. ஆனால் விட்டமின் ஈயில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்கள் கண் பார்வை திறனை அதிகரிப்பதோடு கண் நோய்களையும் சரி செய்கிறது.

விட்டமின் ஈ என்பது கொழுப்பில் கரையக் கூடியது. எனவே இது நம் கொழுப்பு திசுக்களில் சேகரிக்கப்படுகிறது. இந்த சத்தை அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது சில பக்க விளைவுகள் ஏற்படும்.தலைவலி,குமட்டல்,சளி , வ்யிற்றுப் போக்கு, சரும வடுக்கள் அல்லது அழற்சி போன்றவை ஏற்படும்.

விட்டமின் ஈ யில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்கள் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தை குறைத்து அல்சைமர் மற்றும் பர்கின்சன் நோய் வராமல் தடுக்கிறது.

Tags
Show More

Related News

Back to top button
Close