You are the same tiger : வைகோவை புகழ்ந்த ராம் ஜெத்மலானி

புகழ்பெற்ற வழக்கறிஞரும், மாநிலங்களவை உறுப்பினருமான ராம் ஜெத்மலானியை மதிமுக பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ சந்தித்து பேசினார்.

டெல்லியில் உடல்நலக் குறைவுற்று வீட்டில் ஓய்வில் இருக்கின்ற இந்தியாவின் புகழ்பெற்ற வழக்குரைஞரும், மாநிலங்களவை உறுப்பினருமான ராம் ஜெத்மலானியை, மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ சந்தித்து பேசினார்.

வைகோவை கண்ட ராம் ஜெத்மலானி மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்.  அப்போது வைகோ, உங்கள் சகோதரன் உங்கள் தோழன் வைகோ மாநிலங்களவை உறுப்பினராகப்  பொறுப்பு ஏற்று இருக்கின்றேன் என்று தெரிவித்தார். அதைக் கேட்டு ராம் ஜெத்மலானி, You are the same tiger
God bless you நீ அதே புலிதான் என்றும்  கடவுள் உன்னை ஆசீர்வதிப்பார் என்றார். அதற்கு வைகோ, You are the same lion  நீங்கள் அதே சிங்கம் தான் என்றார்.

ஜெத்மலானியின் தலையை வைகோ வருடியபோது  அவர் உணர்ச்சி வயப்பட்டு, நெஞ்சம் நெகிழ்ந்து நன்றி நன்றி என்றார்.

நீங்கள் முழு உடல் நலம் பெற்று மாநிலங்களவைக்கு வருவீர்கள் என்றார் வைகோ.

அதற்கு Today, I am happy இன்றைக்கு நான் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கின்றேன்
என்றார் ஜெத்மலானி.

வைகோ விடைபெறுகையில், ஜெத்மலானியின் உதவியாளர்கள், கடந்த சில நாள்களாக  ராம்ஜெத்மெலானி யாரிடமும் பேசவில்லை  இன்று உங்களிடம் தான் பேசினார் You are lucky  person என்றனர்.

Related Posts