ஃபெப்சி தொழிலாளர்களுக்கு நிதியுதவி அளித்த நடிகர்கள்….!

தமிழகத்தில் கொரோனாவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக சுமார் 13,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்றுவரை தமிழ்நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 12-ஆக இருந்தது. இந்தநிலையில், இன்று மட்டும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 18-ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் கொரோனா பாதித்த 6 பேர் கண்டறியப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் வேகமாகப் பரவிவரும் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன.

இன்று மார்ச் 24 முதல் தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது தமிழக அரசு. மேலும், கல்விக் கூடங்கள், திரையரங்குகள் என அனைத்துமே மூடப்பட்டுள்ளன.

படப்பிடிப்புகள் அனைத்துமே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் ஃபெப்சி தொழிலாளர்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள் எனவும் அவர்களுக்கு உதவ நடிகர் – நடிகைகள் முன்வர வேண்டும் என்று ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார் .

இந்த அறிக்கை வெளியானவுடனே முதல் நபராக சிவகுமார், சூர்யா மற்றும் கார்த்தி இணைந்து 10 லட்ச ரூபாய் ஃபெப்சி தொழிலாளர்களுக்கு வழங்கினர்.

அவர்களைத் தொடர்ந்து பார்த்திபன் 250 மூட்டை அரசி வழங்கியுள்ளார். ஒவ்வொன்றுமே 25 கிலோ எடை கொண்டதாகும். நடிகர் மற்றும் இயக்குநர் மனோ பாலா 10 மூட்டை அரிசி வழங்கியுள்ளார். அனைத்துமே 25 கிலோ எடை கொண்டதாகும்.

இவர்களைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் ஃபெப்சி அமைப்புக்கு 10 லட்ச ரூபாய் வழங்கியுள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதியும் தன் பங்கிற்கு 10 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.

இவர்களைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் பெப்சி தொழிலாளர்களுக்காக 50 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.

What do you think?

வெளியில் செல்லும் போது முறையான ஐடிக்கள், டாக்குமெண்டுக்களை வைத்துக்கொள்ள வேண்டும் : மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

ஃபெப்சி தொழிலாளர்களுக்கு நிதியுதவி அளித்த தனுஷ் , கமல் மற்றும் இயக்குனர் ஷங்கர்…!