ஃபெப்சி தொழிலாளர்களுக்கு நிதியுதவி அளித்த தனுஷ் , கமல் மற்றும் இயக்குனர் ஷங்கர்…!

இந்தியாவில் வேகமாகப் பரவிவரும் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன

தமிழ்நாட்டில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று. இவர்களில் 4 பேர் இந்தோனேசியர்கள். ஒருவர் சென்னையைச் சேர்ந்த பயண வழிகாட்டி. ஐந்து பேரும் சேலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மார்ச் 22ஆம் தேதி முதல் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.

இதனை அடுத்து தமிழ்நாட்டில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 23ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் தமிழகத்தில் முதல் உயிரிழப்பு பதிவாகியுள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மார்ச் 24 முதல் தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது தமிழக அரசு. மேலும், கல்விக் கூடங்கள், திரையரங்குகள் என அனைத்துமே மூடப்பட்டுள்ளன.

படப்பிடிப்புகள் அனைத்துமே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் ஃபெப்சி தொழிலாளர்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள் எனவும் அவர்களுக்கு உதவ நடிகர் – நடிகைகள் முன்வர வேண்டும் என்று ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார் .

இந்த அறிக்கை வெளியானவுடனே முதல் நபராக சிவகுமார், சூர்யா மற்றும் கார்த்தி இணைந்து 10 லட்ச ரூபாய் ஃபெப்சி தொழிலாளர்களுக்கு வழங்கினர்.

அவர்களைத் தொடர்ந்து பார்த்திபன் 250 மூட்டை அரசி வழங்கியுள்ளார். ஒவ்வொன்றுமே 25 கிலோ எடை கொண்டதாகும். நடிகர் மற்றும் இயக்குநர் மனோ பாலா 10 மூட்டை அரிசி வழங்கியுள்ளார். அனைத்துமே 25 கிலோ எடை கொண்டதாகும்.

இவர்களைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் ஃபெப்சி அமைப்புக்கு 10 லட்ச ரூபாய் வழங்கியுள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதியும் தன் பங்கிற்கு 10 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் பெப்சி தொழிலாளர்களுக்காக 50 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.

இவர்களைத் தொடர்ந்து தற்போது நடிகர் தனுஷ் 15 லட்சம் ருபாய் வழங்கியுள்ளார். மேலும் நடிகர் கமல் 10 லட்சம் ரூபாயும், இயக்குனர் ஷங்கர் 10 லட்சம் ரூபாயையும் கொடுத்துள்ளனர்.

What do you think?

ஃபெப்சி தொழிலாளர்களுக்கு நிதியுதவி அளித்த நடிகர்கள்….!

ஏழைகளுக்கு உதவ ரூ.1.7 லட்சம் கோடி நிதி ; நிர்மலா சீதாராமன் அறிவிப்பு….!