அசத்துவானா அயலான்? – சிவகார்த்திகேயன் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்திற்கான தலைப்பை ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டுள்ளார்.

‘இன்று நேற்று நாளை’ படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் கவனம் ஈர்த்தவர் ரவிக்குமார் குறைந்த செலவில் சயின்ஸ் பிக்சன் படமாக வெளிவந்த இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இவரின் இரண்டாவது படத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் பிரீத் சிங் ஆகியோர் நடிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். நேற்று வெளியான இப்படத்தின் தலைப்பு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை எகிறச்செய்துள்ளது. ’அயலான்’ என பெயரிடப்பட்டுள்ள இதனை இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டுள்ளார். படத்தின் தலைப்பும் அது திரையில் வரும் காட்சிகளையும் வைத்து பார்க்கும் போது முழுக்க முழுக்க இதுவும் சயின்ஸ் பிக்சன் படமாகவே இருக்கும் என்று உறுதியாகியுள்ளது, இதுமட்டுமின்றி அயலான் என்றால் என்ன அர்த்தம் என்ற விவாதமும் சமூக வலைதளங்களில் சூடுபிடித்துள்ளது.

What do you think?

டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு வழக்கில் தலைமறைவாக இருந்த காவலர் சித்தாண்டி கைது!

புதுவை இளைஞருக்கு கொரோனா வைரஸ் உறுதி..!