அன்புச்செழியன் வீட்டில் 65 கோடி பறிமுதல்? – வருமானவரித் துறையினர் அதிரடி!

மதுரையைச் சேர்ந்த சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் வீடுகளிலும் அலுவலகங்களில் வருமானவரித் துறையினர் மேற்கொண்ட சோதனையில், 65 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

சென்னை தேனாம்பேட்டையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது ஏ.ஜி.எஸ் எண்டர்டெய்மெண்ட் என்கிற சினிமா தயாரிப்பு நிறுவனம். கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் தமிழ் படங்களை தயாரித்து வரும் இந்நிறுவனம், திரைப்பட உரிமை விநியோகத்திலும் ஈடுபட்டு வருகிறது. இதுதவிர சென்னையில் தியாகராயநகர், வில்லிவாக்கம், நாவலூர், மதுரவாயல் ஆகிய பகுதிகளில் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளையும் சொந்தமாக நடத்தி வருகிறது.

இந்நிலையில் இந்நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக வருமானவரித் துறையினருக்கு அடுக்கடுக்கான புகார்கள் வந்தன. இதையடுத்து வருமானவரித் துறையினர் ஏ.ஜி.எஸ் நிறுவனத்துக்கு சொந்தமான 20 இடங்களில் நேற்று (பிப்-5) சோதனையில் ஈடுபட்டனர். இச்சோதனையில் பிகில் திரைப்படத்துக்கு மதுரையைச் சேர்ந்த சினிமா பைனான்சியரும் தயாரிப்பாளருமான அன்புச்செழியன் நிதியுதவி செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதை அடிப்படையாக வைத்து அன்புச்செழியனுக்கு சொந்தமான சென்னை, மதுரை ஆகிய இடங்களில் உள்ள வீடுகள், அலுவலகங்களில் வருமானவரித் துறையினர் சோதனை செய்தனர்.

இச்சோதனையில் சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களில் இருந்து 65 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. மேலும், பிகில் படத்திற்காக அதிக சம்பளம் வாங்கியதாக நடிகர் விஜய்யிடமும் வருமானவரித் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. .

What do you think?

‘செருப்பை கழட்டி விடுடா’ – கட்டளையிட்ட அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்!

குடியரசு நாள் அணிவகுப்பில் சில மாநில அரசுகளின் ஊர்திகளுக்கு இடம் தராதது ஏன்? – வைகோ கேள்வி