ஆக்ராவில் வண்ணமயமாக ஹோலி கொண்டாடிய ஏவி 31 படக்குழுவினர் …!

குற்றம் 23 படத்தை தொடர்ந்து இயக்குனர் அறிவழகன் மீண்டும் அருண் விஜய்யை வைத்து ஸ்பை த்ரில்லர் படத்தை பிரம்மாண்டமாக இயக்கவுள்ளார்.இது அருண்விஜய்யின் ௩௧ ஆவது படம் .

இந்தப்படத்தை ஆல் இன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது. இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக ரெஜினா கசாண்ட்ரா நடிக்கவுள்ளார். மேலும், இரண்டாவது ஹீரோயினாக புதுமுக நடிகை ஸ்டெஃபி பாட்டேல் இணைந்துள்ளார்.

முதற்கட்டமாக ஏவி 31 படத்தின் படப்பிடிப்பு ஆக்ராவில் முழு வீச்சில் நடந்துகொண்டிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஏவி 31 படக்குழுவினர் ஆக்ராவில் வண்ணமயமாக ஹோலி பண்டிகை கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

What do you think?

வெளியானது விஷாலின் துப்பறிவாளன் -2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக்….!

‘123 நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ்’ 4,627 பேர் பலி!