இன்று இந்தியா வருகிறார் இலங்கை பிரதமர் ராஜபக்சே

இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சே, 4 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று இந்தியா வருகை தருகிறார்.

இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சே, நான்கு நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று இந்தியாவிற்கு வருகை தருகிறார். இன்று மாலை இந்தியா வரவுள்ள அவருக்கு, டெல்லி விமான நிலையத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் அவர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து பேசுகிறார்.

நாளை (சனிக்கிழமை) பிரதமர் மோடியை சந்திக்கும் மஹிந்த ராஜபக்சே, பிராந்திய கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு, மாலத்தீவு, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகள் இணைந்த முத்தரப்பு கடல் சார் பாதுகாப்பில் ஒத்துழைப்பு ஆகியவை குறித்து ஆலோசனை நடத்துவார் என இலங்கை பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

இந்த சுற்றுப் பயணத்தின்போது வாரணாசி, சாரநாத், புத்தகயா, திருப்பதி ஆகிய இடங்களில் உள்ள கோயில்களுக்கு செல்லவும் ரஜபக்சே திட்டமிட்டுள்ளார். சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த பின்னர் 11-ஆம் தேதி ராஜபக்சே இலங்கை புறப்படுகிறார்.

What do you think?

குரூப் 4 தேர்வு முறைகேட்டில் இன்னும் 700 பேருக்கு தொடர்பா?

vaiko mp

மேற்குத் தொடர்ச்சி மலைகளைப் பாதுகாக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன?வைகோ எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு பதில்