இறுதிகட்ட படப்பிடிப்பில் தனுஷின் கர்ணன்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் கர்ணன் படம் குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

‘அசுரன்’ படத்தை அடுத்து கலைப்புலி தாணு தயாரிக்கும் கர்ணன் படத்திலும் தனுஷ் நடித்து வருகிறார். ‘பரியேறு பெருமாள்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த மாரி செல்வராஜ் இப்படத்தை இயக்கி வருகிறார். சமூகப் பிரச்சினைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள கர்ணன் படத்தின் படப்பிடிப்பு தென்மாவட்டங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

தனுஷூடன் கர்ணன் படத்தில் நடித்து வரும் மலையாள நடிகர் லால், தனது ட்வீட்டர் பக்கத்தில் முக்கியமான தகவலை பதிவிட்டுள்ளார். “இயக்குநர் மாரி செல்வராஜ் சிறப்பாக பணியாற்றி வருகிறார். தனுஷூம் கர்ணன் திரைப்படமும் எல்லைகளை கடந்து சிறப்பான உயரத்தை அடைய பங்களிப்பு செய்து வருகிறார். தனது சிறந்த வேலையின் மூலம் அனைவருக்கும் திருப்தி அளிக்கும் விதத்தில் படத்தை உருவாக்கி வருகிறார்” என்று அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், ‘கர்ணன்’ படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் நிறைவடைந்து விடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

What do you think?

நடிகர் விஜய்யிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை!

தொடரும் கொரோனா அச்சுறுத்தல்! – சீனாவில் 500க்கும் மேற்பட்டோர் பலி