‘உள்நோக்கம் இல்லை, வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்’ – திண்டுக்கல் சீனிவாசன்

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் செருப்பை பழங்குடியின மாணவன் கழட்டி விட்ட சம்பவம் சர்ச்சையானதை தொடர்ந்து, தனது செயலுக்கு எந்த உள்நோக்கமும் இல்லை அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள முதுமலை காப்பகத்தில், யானைகள் முகாமை தொடங்கி வைக்க சென்றிருந்தார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். அப்போது அங்கிருந்த பழங்குடியின சிறுவனை அழைத்து தனது காலணியை கழட்டி விடுமாறு சீனிவாசன் கூறினார். இதனால் அச்சிறுவனும் அமைச்சரின் செருப்பை கழட்டிவிட்டார். அப்போது அங்கு மாவட்ட ஆட்சியர், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இருந்தனர். அமைச்சரின் இந்த செயலை கண்டித்து பொதுமக்கள் ஏராளமானோர் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வந்தனர்.

இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், “என் பேரன் போன்று அந்த சிறுவர்களை நினைத்து உதவிக்காக அழைத்துதான் செருப்பைக் கழட்ட சொன்னேன். இதில் உள்நோக்கம் ஏதும் இல்லை. இதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறியுள்ளார்.

What do you think?

குடியரசு நாள் அணிவகுப்பில் சில மாநில அரசுகளின் ஊர்திகளுக்கு இடம் தராதது ஏன்? – வைகோ கேள்வி

‘தாய்லாந்தில் உயிரிழந்த இளைஞரின் உடல் விரைவில் கரூர் வந்து சேரும்’ – வைகோவின் முயற்சிக்கு பலன்