‘ஊழலின் ஊற்றுக்கண் டி.என்.பி.எஸ்.சி’ – உதயநிதி ஸ்டாலின் சாடல்

ஊழலின் ஊற்றுக்கண்ணாக டி.என்.பி.எஸ்.சி மாறியிருக்கிறது என திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக சாடியுள்ளார்.

டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடுகளை சிபிஐ விசாரிக்ககோரி, திமுக இளைஞரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை பாரிமுனையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமை வகித்தார். மேலும், சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்பரமணியன், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு டி.என்.பி.எஸ்.சியைக் கண்டித்தும், தமிழக அரசைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “டி.என்.பி.எஸ்.சி ஊழலின் ஊற்றுக்கண்ணாக மாறியிருப்பதாகவும், தமிழகத்தில் நடக்கும் தரமில்லாத ஆட்சிக்கு டி.என்.பி.எஸ்.சி ஊழலே சான்று” என்றும் கூறினார். மேலும், தேர்வாணையத்தின் கையாளாகாத தனத்தையே இந்த முறைகேடு காட்டியுள்ளதாகவும் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக சாடினார் .

What do you think?

தமிழகத்தில் 5, 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து

தனியார் மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து எல்.ஐ.சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!