ஏழைகளுக்கு உதவ ரூ.1.7 லட்சம் கோடி நிதி ; நிர்மலா சீதாராமன் அறிவிப்பு….!

நாட்டில், ‘கொரோனா’ வைரஸ் தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை, 612 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில், முதல் பலி நேற்று பதிவான நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை, 10 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியா முழுவதும், 21 நாட்கள் முழுமையான ஊரடங்கிற்கு உத்தரவிட்டதன் மூலம் வலுவான நடவடிக்கையை, பிரதமர் நரேந்திர மோடி, முன்னெடுத்துள்ளார்.இதற்கு இந்தியாவுடன், ஐ.நா., என்றும் துணை நிற்கும்’ என, உலக சுகாதார நிறுவனம் பாராட்டு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இரு நாட்களுக்கு முன்பு நிருபர்களை சந்தித்த நிர்மலா சீதாராமன், எந்த ஒரு வங்கி ஏடிஎம் மையத்திலும் கட்டணமின்றி பணம் எடுத்துக்கொள்ளலாம்.

2018-19ம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய 2020 ஜூன் 30 வரை கால நீட்டிப்பு செய்யப்படுகிறது. தாமதமாக செலுத்தப்படும் வருமான வரிக்கான வட்டி 12 சதவீதத்திலிருந்து 9 சதவீதமாக குறைக்கப்படுகிறது. ஆதார்-பான் இணைப்புக்கான கெடு மார்ச் 31 வரையிலிருந்தது, அது ஜூன் 30ம் தேதிக்கு நீட்டிக்கப்படுகிறது உள்ளிட்ட சில அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் இன்று மதியம் 1.15 மணியளவில் டெல்லியில் நிருபர்களை சந்தித்தார் நிர்மலா சீதாராமன்.

லாக்டவுன் அறிவித்து 2 நாட்கள் ஆகியுள்ளது . இதனால் நேரடியாக பாதிக்கப்படும் ஏழைகளுக்கு நிதி அளிக்க முடிவு செய்துள்ளோம். இது ரூ.1.7 லட்சம் கோடி மதிப்புள்ளது

பிரதான் மந்திரி கரீப் கல்யாண் திட்டத்தின்கீழ், மாதத்துக்கு 5 கிலோ அரிசி மற்றும் 5 கிலோ கோதுமை ஏற்கனவே வழங்கப்பட்டு வருகிறது. அடுத்த மூன்று மாதங்களுக்கு அரிசி அல்லது கோதுமை என அவர்கள் எதை வாங்கினாலும், கூடுதலாக 5 கிலோ அரிசி அல்லது கோதுமை (வாங்குவோரின் விருப்பம்) இலவசமாக வழங்கப்படும்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகை பருப்புகளை விரும்புவர்கள். அவர்கள் விரும்பும் பருப்புகளை ஒரு குடும்பத்திற்கு தலா ஒரு கிலோ 3 மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படும். அடுத்த மூன்று மாதங்களுக்கு இந்த திட்டம் தொடரும் என கூறியுள்ளார்.

What do you think?

ஃபெப்சி தொழிலாளர்களுக்கு நிதியுதவி அளித்த தனுஷ் , கமல் மற்றும் இயக்குனர் ஷங்கர்…!

சென்னையில் ஊரடங்கு உத்தரவை மீறியதால் 283 வழக்குகள் பதிவு….!