கத்தி, துப்பாக்கியுடன் மோதிக்கொண்ட கல்லூரி மாணவர்கள் கைது!

சென்னை அருகே கத்தி, துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் மோதிக்கொண்ட தனியார் கல்லூரி மாணவர்கள் 10 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

காட்டாங்கொளத்தூரில் தனியார் கல்லூரி முன்பு மாணவர்கள் 2 குழுக்களாக பிரிந்து கத்தி, துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு தாக்கிக்கொண்டதில் 2 பேர் காயமடைந்தனர். மாணவர்கள் ஆயுதங்களுடன் மோதிக்கொண்ட இச்சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் வலியுறுத்தினர்.

இதனையடுத்து மோதலில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் என 10 பேர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். மேலும், அவர்களிடமிருந்த ஆயுதங்களையும் பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

What do you think?

இது என்ன புதுசா இருக்கு? – குழந்தை பிறந்தா அப்பாவுக்கும் லீவு!

அதிகரிக்கும் கொரோனா வைரஸ் உயிரிழப்பு, சீனாவில் 636 பேர் பலி!