February 27, 2020
Madhimugam
அரசியல் இந்தியா

‘காந்தி நடத்திய நாடகம்’ – பாஜக அமைச்சரின் சர்ச்சை பேச்சால் மக்களவை ஒத்திவைப்பு!

மகாத்மா காந்தியின் விடுதலை போராட்டம் குறித்து, பாஜக எம்.பி அனந்தகுமார் ஹெக்டே பேசிய சர்ச்சை கருத்தால் மக்களவை நண்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சரும் உத்தர கன்னட தொகுதி பாஜக எம்பியுமான அனந்தகுமார் ஹெக்டே கலந்துகொண்டார். அந்நிகழ்ச்சியில் பேசிய அவர், “மகாத்மா காந்தி நடத்திய சுதந்திரப் போராட்டம் ஒரு நாடகம். ஒட்டுமொத்த சுதந்திரப் போராட்டம் முழுவதுமே, ஆங்கிலேயர்களின் அனுமதியுடன், ஆதரவுடன் நடத்தப்பட்டது. தலைவர்கள் என அழைக்கப்படக் கூடியவர்கள் யாரேனும் போலீசாரால் ஒருமுறையாவது தாக்கப்பட்டுள்ளார்களா?. வரலாற்றைப் படிக்கும் போது என் ரத்தம் கொதிக்கிறது. தேசத்தின் மகாத்மா என எப்படி இவர்கள் உயர்ந்தார்கள்” என சர்ச்சையாக பேசியிருந்தார்.

இந்நிலையில் இன்று மக்களவை தொடங்கியதும் ஓமன் மன்னர் குவாபூஸ் பின் சயத் அல் சயத் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதன்பின்னர் மகாத்மா காந்தி குறித்து பாஜக எம்பி அனந்தகுமார் ஹெக்டே பேசிய சர்ச்சை கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். அனந்தகுமார் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்ய வேண்டும், பிரதமர் மோடி இதுகுறித்து அவையில் விளக்கமளிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். இதனால் நாடாளுமன்றத்தில் கடும் கூச்சல், குழப்பம் நிலவியதையடுத்து, அவையை நண்பகல் வரை மக்களவைத் தலைவர் ஒத்திவைத்தார். 

Related posts

மதிமுகவின் 28-வது பொதுக்குழு கூட்டம் தேதி அறிவிப்பு

Digital Team

பிட்காயின் மோசடி! – காவல்துறை எச்சரிக்கை

Digital Team

டிக்-டாக்கில் சாகசம் செய்த இளைஞர்; அறிவுரை கூறிய பியூஸ் கோயல் – Tik-Tok

Digital Team

40 சதவிகித டயர்கள் தமிழகத்தில்தான் உற்பத்தியாகிறது – முதலமைச்சர் பெருமிதம்!

Digital Team

டிரம்ப் வருகை : பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சி 4 கேள்விகள்…!

superadmin

விளைபொருட்களுக்கு குறைந்த அளவு ஆதரவு விலை அறிவித்திருப்பதாக வைகோ கேள்வி

Digital Team
You cannot copy content of this page
Madhimugam