காமெடி சூப்பர் ஸ்டார் யோகிபாபு ரகசிய திருமணம்

முன்னணி காமெடி நடிகரான யோகிபாபுவின் திருமணம் செய்யாறில் உள்ள அவரது குலதெய்வ கோயிலில் இன்று காலை (பிப்-5) மிக ரகசியமாக நடந்தது.

தமிழ் சினிமாவில் தற்போதைய காமெடி சூப்பர் ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் யோகிபாபு. ரஜினி, விஜய், அஜித், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களின் படங்களில் இவர் இல்லாமல் இருப்பதில்லை. தொடர்ந்து இவரது காமெடி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இவரது திருமணம் திடீரென மிகவும் ரகசியமாக நடந்தது சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. செய்யாறு அருகேயுள்ள மேல்நகரம்பேடு கிராமத்திலுள்ள கோயில் ஒன்றில் மஞ்சு பார்கவி என்ற பெண்ணுடன் நடந்த இத்திருமணத்தில் யோகி பாபுவின் உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். விரைவில் இந்த திருமணம் குறித்த தகவல்களை யோகிபாபு வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

What do you think?

நிர்பயா வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு !

கோலாகலமாக நடைபெற்ற தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு