குரூப் 4 தேர்வு முறைகேட்டில் இன்னும் 700 பேருக்கு தொடர்பா?

டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேட்டில் தொடர்புடைய காவலர் சித்தாண்டி, பூபதி உள்ளிட்ட 8 அரசு ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பூதாகரமாக உருவெடுத்துள்ளது குரூப் 2 ஏ மற்றும் குரூப் 4 தேர்வு முறைகேடுகளுக்கு உடைந்தையாக இருந்த ஆயுதப்படை காவலர் சித்தாண்டி, பூபதி ஆகியோரை கைது செய்து சிபிசிஐடி விசாரித்து வருவதால், அவர்களை பணியிடை நீக்கம் செய்வதாக சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அறிவித்துள்ளார். இதேபோல், முறைகேடாக தேர்ச்சி பெற்று அரசுப் பணியில் சேர்ந்த ஜெயராணி, வேல்முருகன், சுதா, ஞானசம்பந்தம், வடிவு, ஆனந்தன் ஆகியோரும் கைது செய்யப்பட்டிருப்பதால், அவர்களையும் பத்திரப்பதிவுத்துறை ஐ.ஜி பணியிடை நீக்கம் செய்துள்ளார்.

இதனிடையே, காவலர் சித்தாண்டியும், இடைத்தரகர் ஜெயக்குமாரும் 2012 ஆம் ஆண்டு முதலே இணைந்து செயல்பட்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்களின் மூலம் 726 பேர் அரசுப் பணியில் சேர்ந்திருப்பதாகவும், அவர்களின் பட்டியலை சிபிசிஐடி தயாரித்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக டி.என்.பி.எஸ்.சி வினாத்தாளை அச்சடிக்கும் பூவிருந்தவல்லி தனியார் நிறுவனத்தின் உரிமையாளருக்கும் இந்த முறைகேட்டில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. மதுரையைச் சேர்ந்த அவரையும் விசாரிக்க சிபிசிஐடி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

What do you think?

விஜய் வீட்டில் நடத்தப்படும் சோதனையில் அரசியல் இல்லை – மாஃபா பாண்டியராஜன்

இன்று இந்தியா வருகிறார் இலங்கை பிரதமர் ராஜபக்சே