கொரோனா அறிகுறி; தமிழகத்தில் 2,635 பேர் தீவிர கண்காணிப்பு!

கொரோனா வைரஸ் காரணமாக தமிழகத்தில் 2635 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருப்பதாக பொது சுகாதார இயக்குநரகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை விமான நிலையங்களில் இதுவரை ஒரு லட்சத்து 84 ஆயிரத்து 861 பயணிகளை பரிசோதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, 2635 பேர் வீடுகளில் 28 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், 24 பேர் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களில் அதிகபட்சமாக சென்னையில் 934 பேரும், குறைந்தபட்சமாக தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் மாவட்டங்களில் தலா 4 பேரும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புகள் குறித்து இதுவரை 140 பேரின் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாகவும், இதில் 139 மாதிரிகளின் முடிவுகள் வந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முடிவுகளின் படி 138 பேருக்கு கொரோனா இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஒருவருக்கு நோய் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், ஒரு மாதிரியின் முடிவு மட்டும் வரவில்லை என்றும் சுகாதார இயக்ககம் தெரிவித்துள்ளது.

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவருக்கு நோய் குணமடைந்த நிலையில், தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், உடல்நிலை சீராக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

What do you think?

-1 points
Upvote Downvote

காஞ்சிபுரம் பொறியாளருக்கு மீண்டும் கொரோனா பாதிப்பா?

‘தோனி கதை முடிந்தது’ சேவாக் அதிரடி கருத்து, கோபத்தில் ரசிகர்கள்!