கொரோனா உயிர்பலி எண்ணிக்கை 2,442 ஆக அதிகரிப்பு

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,442 ஆக உயர்ந்துள்ளது.

சீனாவின் ஹுபே மாகாணத்தில் உள்ள வுகானில் உருவான கொரோனா வைரஸ், உலகின் பல்வேறு நாடுகளுக்குப் பரவி பெரும் அச்சுறுத்தலாக விளங்குகிறது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த சீன சுகாதாரத்துறை திணறி வரும் நிலையில், கொரோனா பாதிப்பால் நேற்று (பிப்-22) மட்டும் 97 பேர் சீனாவில் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா தாக்கியதில் உயிரிழந்வர்களின் எண்ணிக்கை 2,442 ஆக உயர்ந்துள்ளது.

இதேபோல் 76,936 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனிடையே, இத்தாலியில் 80-க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், 2 பேர் உயிரிழந்துள்ளனர். தென்கொரியாவில் 556 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 2 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

What do you think?

நியூசி டெஸ்ட் இந்திய அணி போராட்டம்

சிங்கப்பூரில் கொரோனா; மத்திய அரசு எச்சரிக்கை!