கொரோனா வைரஸ் குறித்து அமிதாப் பச்சன் வெளியிட்ட வீடியோ….!

சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று தற்போது 110 நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்த கொரோனா தொற்றுக்கு இதுவரை 4200 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 24,000 பேருக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

உலகளவில் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு மத்தியில், மக்கள் பாதுகாப்பாக இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இந்நிலையில் அமிதாப் பச்சனும் COVID-19 குறித்த தனது எண்ணங்களை மக்களிடம் பகிர்ந்து கொள்ளதனது சொந்த கவிதை பாணியில், அவர் ஒரு சில வரிகளை எழுதி, அதன் வீடியோ இணைப்பை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் .

டி 3468 – COVID 19 பற்றி கவலை.. சில வரிகளை ட்வீட் செய்துள்ளார். தயவுசெய்து பாதுகாப்பாக இருங்கள் என கூறியுள்ளார் .

What do you think?

கொரோனாவால் இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான ஒருநாள் தொடரும் ரத்து!

யெஸ் வங்கியில் ரூ.1,000 கோடி முதலீடு செய்ய ஐசிஐசிஐ வங்கி முடிவு….!