கொரோனா வைரஸ் தடுப்பு எச்சரிக்கை ; பொதுமக்களுக்கு முதலமைச்சர் வேண்டுகோள்….!

உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் கடுமையாக தாக்கி வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 107 ஆக உயர்ந்துள்ளது. இந்த கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தமிழக மக்கள் வெளிமாநிலங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள உத்தரவில் :-

தமிழகம் முழுவதும் LKG முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளுக்கு மார்ச் 31-ஆம் தேதி முறை விடுமுறை விடப்படுகிறது.


நாட்டு மக்கள் மத்தியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், தமிழக மக்கள் அத்தியாவசம் இன்றி வெளிமாநிலங்களுக்கு செல்ல வேண்டாம்.


இயல்புநிலைக்கு திரும்பும் முயற்சியாக மாநில எல்லைகளில் அமைந்துள்ள திரையரங்குகளை மூட உத்தரவிடப்படுகிறது. அந்த வகையில் மார்ச் 31 வரை எல்லையோர மாவட்டங்களில் திரையரங்குகள், வணிக வளாகங்களை மூட உத்தரவிடப்படுகிறது.


அடுத்த 15 நாட்களுக்கு பொது இடங்களில் அதிகளவில் கூடுவதை தவிர்க்க வேண்டும்.


வயதானவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள், குழந்தைகள் கூட்டம் நிறைந்த பொது இடங்களுக்கு செல்ல வேண்டாம்.


கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட ரூ.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

வழிபாட்டு தலங்களுக்கு வருவோரை தீவிரமாக கண்காணிக்க சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்படுகிறது.


கிருஷ்ணகிரி, நெல்லை, தென்காசி, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களிலும் திரையரங்குகள், வணிகவளாகங்களை மூட உத்தரவிடப்படுகிறது.


ஊடகங்களுக்கு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்க சுகாதாரத்துறை அமைச்சருக்கு உத்தரவு.
அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க உத்தரவு.

இவ்வாறு முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

What do you think?

மாஸ்டர் இசைவெளியீட்டு விழா மேடையில் தாயின் ஆசையை நிறைவேற்றிய விஜய்

மறைந்த திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகனின் படத்திறப்பு நிகழ்ச்சி….!