February 27, 2020
Madhimugam
தமிழ்நாடு மருத்துவம்

கொரோனா வைரஸ் பாதிப்பு? தீவிர கண்காணிப்பில் தமிழகம்! – அமைச்சர் விஜயபாஸ்கர்

சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து தழிழகம் திரும்பிய 799 பேர் தீவிரமாக
கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிட்யூட் வளாகத்தில், கொரோனா வைரஸ் பாதிப்புகளை கண்டறிவதற்காக அமைக்கப்பட்டுள்ள ஆய்வுக் கூடத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்து, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னை, திருச்சி, மதுரை, கோவை என 4 விமான நிலையங்களில் இதுவரை ஐந்தாயிரத்து 543 பயணிகளை சோதனை செய்துள்ளதாக கூறினார். சீனாவில் இருந்து வந்த 646 பேர் உள்பட 799 பேர் தீவிரமாக கண்காணிக்கப்படுவதாக தெரிவித்தார். இதனையடுத்து முன்னேற்பாடாக ஆயிரத்து 642 பாதுகாப்பு உடைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதனையடுத்து கிங்ஸ் இன்ஸ்டியூட் ஆய்வுக் கூடத்தில், உள்ளவர்களை
மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு 48 மணி நேரத்தில் அதன் முடிவுகள்
தெரிய வரும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.இதனிடையே, கொரோனா வைரஸ் தாக்குதல் இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளவர்களுக்கு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கூடுதல்
சிறப்பு வார்டு திறக்கப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து நேற்று சென்னைக்கு விமானத்தில் வந்த 8 பேருக்கு காய்ச்சல் அறிகுறி இருந்தது. அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் தனி ஆம்புலன்ஸ் மூலம் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு சிறப்பு மருத்துவ குழுவினர் மூலம் தீவிர பரிசோதனை நடைபெற்று வருகிறது.

Related posts

டி.என்.பி.எஸ்.சி முறைகேடு; மீண்டும் சிபிசிஐடி விசாரணை

Digital Team

“CAA போராட்டத்தை கொச்சைப்படுத்துவதா”? – நெல்லை முபாரக் கேள்வி

Digital Team

அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசான மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம்

superadmin

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 72 வது பிறந்தநாள் விழா…!

superadmin

பொள்ளாச்சியை போன்று கொடைக்கானலிலும் போதை விருந்து – இளம்பெண்கள் உள்ளிட்ட 270 பேர் கைது

Digital Team

400-ஐ கடந்த கொரோனா உயிர்பலி! – தாய்லாந்து மருத்துவர்களிடம் தீர்வு?

superadmin
You cannot copy content of this page
Madhimugam