February 27, 2020
Madhimugam
ஆன்மிகம் தமிழ்நாடு

கோலாகலமாக நடைபெற்ற தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு

23 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழா கோலாகலமாக நடைபெற்றது.

இந்தியாவின் 29 பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக தஞ்சை பெரிய கோயில் உள்ளது. இக்கோயிலில் 8-ஆவது கால யாக பூஜையுடன் குடமுழுக்கு விழா கோலாகலமாக தொடங்கியது. காலை 4.30 மணியளவில் விழா தொடங்கியது. காலை 7 மணியளவில் பூர்ணாஹுதி, தீபாராதனை, யாத்ரா தானமும், காலை 7.25 மணியளவில் திருக்கலசங்கள் எழுந்தருளலும் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து புனித நீர் நிரப்பப்பட்ட கலசங்கள், கோபுரத்தின் உச்சிக்கு எடுத்துச் செல்லப்பட்டன. பின்னர் மந்திரங்கள் ஓதப்பட்டு, கோபுரத்தின் கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு கோலாகலமாக நடைபெற்றது. தமிழ், சமஸ்கிருதம் என இருமொழிகளிலும் குடமுழுக்கு மந்திரங்கள் ஓதப்பட்டன. கலசத்தில் புனித நீர் ஊற்றப்படும்போது, கோயிலை சுற்றியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் ‘ஓம் நமசிவாய’ என குரலெழுப்பி பக்தி பரவசத்தை வெளிப்படுத்தினர்.

முன்னதாக கோபுரகலசத்தில் மாலை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து கலசத்திற்கு தீபாராதனை காட்டப்பட்டதோடு, தீர்த்த நீர் பக்தர்கள் மீதும் தெளிக்கப்பட்டது. குடமுழுக்கின்போது கோபுரத்தின் மேலே கருடன் வட்டமிட்டது. இதனை பார்த்த பக்தர்கள், கருடனையும் சேர்த்து வழிபட்டனர். ராஜகோபுரத்தை தொடர்ந்து விநாயகர், முருகன், பெரிய நாயகி, அம்மன், வராகி, சண்டிகேஸ்வரர் விமானங்களுக்கு குடமுழுக்கு நடைபெற்ற பின்னர் மூலவர்களுக்கு தீபாராதனை நடைபெற்றது. கூட்ட நெரிசலையொட்டி, குழந்தைகளின் பாதுகாப்பிற்காக அவர்களின் கைகளில் அடையாள பட்டை அணிவிக்கப்பட்டது. மக்களின் வசதிக்காக தற்காலிக பேருந்து நிலையங்கள், பேருந்து நிறுத்தங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 6000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பக்தர்கள் வசதிக்காக குடிநீர், சுகாதார வசதிகள் செய்யப்பட்டுள்ளது. தமிழர் கட்டடக் கலை பெருமையை உலகுக்கு கூறும் தஞ்சை கோயில், குடமுழுக்கையொட்டி வண்ண விளக்குகளால் ஜொலித்தது.

Related posts

குற்ற வழக்குகளில் தொடர்புடையோரை வேட்பாளர்களாக நிறுத்தியது ஏன்? – உச்சநீதிமன்றம் கேள்வி

Digital Team

காவலர் தேர்விலும் போலிச்சான்றிதழ் கொடுத்த ஆயிரம் பேர்..! – விசாரணையில் அம்பலம்

Digital Team

குரூப் 4 தேர்வு முறைகேட்டில் இன்னும் 700 பேருக்கு தொடர்பா?

Digital Team

சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு – 5 பேர் போக்சோவில் கைது

Digital Team

தூத்துக்குடி அருகே சிஏஏ எதிர்ப்பு போராட்டம் – விண்ணதிரச் செய்த முழக்கங்கள்!

Digital Team

‘உள்நோக்கம் இல்லை, வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்’ – திண்டுக்கல் சீனிவாசன்

Digital Team
You cannot copy content of this page
Madhimugam