சென்னையில் ஊரடங்கு உத்தரவை மீறியதால் 283 வழக்குகள் பதிவு….!

தமிழகத்தில் ‘கொரோனா’ வேகமாக பரவும்நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளநிலையில் மருத்துவப்பணி, காவல்பணி, ஊடகப்பணி ஆகிய பணிகளில் ஈடுபடுவோரை தவிர மற்றவர்கள் சாலைகளில் வாகனங்களில் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

21 நாள் சமூக தனிமை என்பதை கடைபிடிக்க 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் யாரும் அவசியமின்றி வெளியே வரக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னையிலும் நேற்று காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்தும் மீறி நடந்ததாக 670 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 283 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுதும் 1200-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

144 தடை உத்தரவை மீறிய குற்றத்திற்காக சென்னை பெருநகரில் 279 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. மேலும், தனிமைப்படுத்தப்பட்ட உத்தரவை மீறிய குற்றத்திற்காக 3 வழக்குகளும், வதந்தி பரப்புவோர் மீது 1 வழக்கும் என மொத்தம் 283 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இதில் தொடர்புடைய 119 இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு இலகு ரக வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

What do you think?

ஏழைகளுக்கு உதவ ரூ.1.7 லட்சம் கோடி நிதி ; நிர்மலா சீதாராமன் அறிவிப்பு….!

உடைக்கு மேட்சாக முகமூடி அணியும் ஜனாதிபதி சுசானா கபுடோவா….!