‘சென்னையில் 3000 வீடுகள் கண்காணிப்பு, வெளியே நடமாடினால் பாஸ்போர்ட் முடக்கம்’ தமிழக அரசு அதிரடி!

சென்னை மாநகராட்சிக்கு உட்படுத்தப்பட்ட பகுதியில் 3,000 வீடுகள் தனிமைப்படுத்தபட்டு கண்காணிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து வந்து வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பயணிகள் வெளியே நடமாடினால் அவர்களின் பாஸ்போர்ட் முடக்கப்படும் என்றும் மேலும் வெளிநாடு சென்று வந்தவர்கள் என்று பிறர் அறியும் வகையில் அவர்களின் வீடுகளில் நோட்டீஸ் ஒட்டப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும் சென்னை மாநகராட்சிக்கு உட்படுத்தப்பட்ட பகுதியில் 3,000 வீடுகள் தனிமைப்படுத்தபட்டு கண்காணிக்கப்படுவதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

What do you think?

மதுபானக் கடைகளை மூட உத்தரவு!

தமிழகம் முழுவதும் நாளை முதல் 144 தடை- முதலமைச்சர் உத்தரவு!