‘செருப்பை கழட்டி விடுடா’ – கட்டளையிட்ட அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்!

பழங்குடியின சிறுவனை அழைத்து தனது செருப்பை கழட்டிவிட சொன்ன அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் செயல் சர்ச்சையாகியுள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள முதுமலை காப்பகத்தில் யானைகள் முகாம் இன்று தொடங்கியது. இதில் கலந்துகொண்ட அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அங்கிருந்த பழங்குடியின சிறுவனிடம் தனது செருப்பை கழட்டிவிடுமாறு கூறினார். “டேய் வாடா வாடா, செருப்பை கழட்டுடா” என அதிகாரத் தோரணையில் கூறியதும் அச்சிறுவன் அமைச்சரின் செருப்பை கழட்டி விட்டான், அப்போது அருகிலிருந்த அதிகாரி ஒருவரும் இதற்கு உதவினார். இந்த சம்பவம் நடந்தபோது மாவட்ட ஆடசித்தலைவர் இன்னசெண்ட் திவ்யா, அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் அங்கிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் இந்த செயல் தற்போது கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

What do you think?

தொடரும் கொரோனா அச்சுறுத்தல்! – சீனாவில் 500க்கும் மேற்பட்டோர் பலி

அன்புச்செழியன் வீட்டில் 65 கோடி பறிமுதல்? – வருமானவரித் துறையினர் அதிரடி!