February 27, 2020
Madhimugam
விளையாட்டு

டி20 தரவரிசையில் ரோஹித் சர்மா, ராகுல் முன்னேற்றம்!

நியூசிலாந்து தொடரில் மாஸ் காட்டிய ரோஹித், கே.எல்.ராகுல் இருவரும் டி20 தரவரிசைப்பட்டியலில் முன்னேற்றமடைந்துள்ளனர்.

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நேற்று முடிவுக்கு வந்தது. இந்த தொடரில் பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் சிறந்து விளங்கிய இந்திய அணி, 5 போட்டிகளையும் வென்று வரலாற்று சாதனை படைத்தது, இத்தொடர் நிறைவடைந்ததை அடுத்து இருபது ஓவர் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்திய வீரர் கே.எல்.ராகுல் 6-வது இடத்தில் இருந்து 2-வது இடத்திற்கும், 13-வது இடத்தில் இருந்த ரோஹித் சர்மா 10 வது இடத்திற்கும், 70-வது இடத்தில் இருந்த மனிஷ் பாண்டே 58-வது இடத்திற்கும் முன்னேறியுள்ளனர். பந்து வீச்சாளர்களில் ஜஸ்ப்ரீத் பும்ரா 37-வது இடத்தில் இருந்து 11-வது இடத்திற்கும், 40-வது இடத்தில் இருந்த யுவேந்திர சாஹல் 30-வது இடத்திற்கும் முன்னேறியுள்ளனர். ஆனால், 1-வது இடத்தில் இருந்த வாஷிங்டன் சுந்தர் 22-வது இடத்திற்கு சரிவடைந்துள்ளார்.

Related posts

இந்தியாவை ஒயிட்வாஷ் செய்த நியூசிலாந்து

Digital Team

மாமல்லபுரத்தில் நடைபெற்ற அமெச்சூர் ஆணழகன் போட்டி…!

superadmin

நியூசி டெஸ்ட் இந்திய அணி போராட்டம்

Digital Team

கிரிக்கெட்டில் மட்டுமல்ல பானிபூரி செய்வதிலும் தோனி தல தான்!

Digital Team

ராஜஸ்தான் வீராங்கனை ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

Digital Team

இந்தியா நியூசிலாந்துக்கு இடையேயான முதல் டெஸ்ட்டில் நியூசிலாந்து அணி அபார வெற்றி!

Yamuna madhimugam
You cannot copy content of this page
Madhimugam