டெல்லியில் நாளை வாக்குப்பதிவு – பாஜகவுக்கு சோதனை!

புதுடெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடக்கிறது.

டெல்லியில் சட்டசபைக்கான பதவிக்காலம் வருகிற 22-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து அங்கு தேர்தலை நடத்துவதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. டெல்லியில் உள்ள 70 தொகுதிகளுக்கும் பிப்ரவரி 8-ஆம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்படும் என்றும், 11-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவித்திருந்தது.

இதையடுத்து, ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த தேர்தல் குறித்த கருத்துக்கணிப்பில் ஆம் ஆத்மி கட்சியே மீண்டும் டெல்லியில் ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று பிராசரம் முடிவடைந்த அங்கு, நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான பாதுகாப்பு பணிகளையும் முன்னேற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

What do you think?

உமர் அப்துல்லா, மெகபூபா முஃப்தி ஆகியோர் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது – தலைவர்கள் கண்டனம்

இது என்ன புதுசா இருக்கு? – குழந்தை பிறந்தா அப்பாவுக்கும் லீவு!