டெல்லியில் விறு விறு வாக்குப்பதிவு…

டெல்லி சட்டப்பேரவைக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி
40 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி, பா.ஜ.க, காங்கிரஸ் கட்சிகள் போட்டியிடுகின்றன. ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டது. முதலமைச்சர் கெஜ்ரிவால் வீதிவீதியாக சென்று வாக்குகளை சேகரித்தார். பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, மற்றும் மத்திய அமைச்சர்கள், 200 எம்.பிக்கள் உள்ளிட்டோர் 70 தொகுதிகளிலும் சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் கட்சியும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டது. இந்நிலையில், டெல்லி சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு காலை 8 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இதனையடுத்து பாதுகாப்பு பணியில் 40 ஆயிரம் போலீசார் ஈடுபட்டுள்ளதாகவும், 545 வாக்குச்சாவடிகள் பதட்டமானவையாக கண்டறியப்பட்டு, அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. அனைவரும் விருப்பு வெறுப்பின்றி வாக்களிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது

What do you think?

சோதனை நல்லது! – அஜித் வழியில் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்

தமன்னாவா இது? – ரசிகர்களை கிறங்கடிக்கும் புகைப்படம் இதோ