டெல்லி வன்முறைக்கு மத்திய மாநில அரசுகளே காரணம் – சோனியா காந்தி !

டெல்லி வன்முறைக்கு மத்திய மாநில அரசுகளே காரணம் என்று குற்றம் சாட்டி சோனியா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்து புகார் மனு அளித்துள்ளனர்.

34 பேர் உயிரிழந்துள்ள டெல்லி வன்முறையில் மத்திய மாநில அரசுகள் மவுனப் பார்வையாளராக மட்டுமே இருந்துள்ளனர் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. 

குடியரசுத் தலைவரைச் சந்தித்த பின்னர் முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங், குடியரசுத் தலைவர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ராஜ தர்மத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் என்றார்  

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்து புகார் மனு

சோனியா காந்தி அளித்த பேட்டியில், மத்திய அரசும், புதிதாக ஆட்சிக்கு வந்த டெல்லி ஆம் ஆத்மி அரசும், நடந்த கலவரத்தை வாய்மூடிப் பார்த்துக் கொண்டிருந்தனர் என்று குற்றம் சாட்டினார்.நடந்த வன்முறைக்குப் பொறுப்பு ஏற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிறது.

What do you think?

டெல்லி வன்முறை: பலி எண்ணிக்கை 32ஆக அதிகரிப்பு !

Corona Virus : 48 நாடுகள், 2802 இறப்பு, 82,059 பாதிப்பு..!