டெல்லி வன்முறை சென்னையிலும் தொடரும் – கலவரத்தை தூண்டும் எச்.ராஜா! #BJPBURNINGINDIA

டெல்லியில் இஸ்லாமியர்கள் மீது பா.ஜ.க குண்டர்கள் தாக்குதலில் ஈடுப் ஈடுபட்டது போல சென்னையிலும் வன்முறை நடக்கும் என எச்.ராஜா பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லியில் உள்ள ஷாஹீன்பாக் பகுதியில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக இஸ்லாமிய பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது வடகிழக்கு டெல்லியில் உள்ள மாஜ்பூர், கோகுலாபுரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக இஸ்லாமியர்கள் போராடி வருகின்றனர்.

இந்நிலையில், பா.ஜ.கவின் தேசிய செயலாளராக உள்ள எச்.ராஜா, டெல்லியில் கடந்த 2 நாட்களாக நடந்தது சென்னையின் ஷாஹீன்பாக் எனக் கூறப்படும் வண்ணாரப்பேட்டையிலும் நடைபெறலாம். ஆகவே ஆயுதங்கள் வருமுன் அங்கிருந்து கலைந்து செல்வது நல்லது எனும் மிரட்டும் தொணியில் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்

எச்.ராஜாவின் இந்த பதிவுக்கு நெட்டிசன்கள் பலர் கடுமையாக திட்டித் தீர்த்தும், சிலர் இஸ்லாமியர்களை உஷார் படுத்தியும் வருகின்றனர்.

What do you think?

ஆறுமுகசாமி ஆணைய முடிவு வெளியானால் ஓ.பி.எஸ்ஸும், ஈ.பி.எஸ்ஸும் கம்பி எண்ணுவார்கள் – மு.க.ஸ்டாலின் பேச்சு!

இத்தாலியில் கொரானா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரே இரவில் 283 அதிகரிப்பு !