ட்விட்டரில் டிரெண்டாகும் #இலவுகாத்தகிளி_ரஜினி ஹேஷ்டேக்….!

சென்னை, லீலா பேலஸ் ஹோட்டலில் இன்று (மார்ச் 12) ரஜினிகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் . முதல்வர் பதவியே எனக்கு வேண்டாம், என் ரத்தத்திலேயே அந்த ஆசை இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் திட்டவட்டமாக கூறி விட்டார்.

நான் தொடங்கும் கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை இருப்பார். இதற்காக ஒரு குழுவை உருவாக்குவேன். வாக்குறுதிகளை செயல்படுத்த, ஒரு கண்காணிப்பு குழு உருவாக்குவேன். என்னால் முதல்வர் பதவியை நினைத்து பார்க்க முடியாது.நான் நல்லவரை முதல்வராக தேர்வு செய்வேன். 50 வயதுக்கு கீழ் இருக்கும் நபர்களை முதல்வராக்குவேன் என கூறியுள்ளார்

தனது அரசியல் பிரவேசத்தை குறித்து தெளிவுப்படுத்தினார் ரஜினி . அதை கொண்டாடும் விதமாக அவரது ரசிகர்கள் ஒருபக்கம் #RajinikanthPolitics மூலம் பாராட்டி வருகின்றனர். அதேநேரத்தில் மற்றொரு ஹேஷ்டேக்கும் #இலவுகாத்தகிளி_ரஜினி சமூக வலைத்தளமான டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.

What do you think?

இயக்குனரான பிரபல நடன மாஸ்டர்..!

தமிழகத்தில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு!