தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விவகாரத்தில் புதிய வழக்கு!

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கின்போது சமஸ்கிருத மந்திரங்களை தமிழில் மொழி பெயர்க்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தஞ்சை பெரியக் கோயில் குடமுழுக்கு, 23 ஆண்டுகளுக்கு பிறகு பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெறுகிறது. அதற்கான ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்து வருகின்றன. இந்நிலையில் சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளையில், ராமநாதபுரத்தைச் சோ்ந்த திருமுருகன், தஞ்சை பெரியகோயில் உரிமைக் கழக ஒருங்கிணைப்பாளா் பெ. மணியரசன், செந்தில்நாதன் உள்ளிட்ட பலரும், குடமுழுக்கை தமிழில் நடத்த வேண்டும் என மனுக்களை தாக்கல் செய்திருந்தனா். இந்த வழக்கை விசாரித்த உயா் நீதிமன்ற கிளை தமிழிலும், சமஸ்கிருதத்திலும் குடமுழுக்கு நடந்ததை 4 வார காலத்துக்குள் இந்து சமய அறநிலையத் துறையும், தஞ்சை அரண்மனை தேவஸ்தானமும் உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, மனுக்களை தள்ளுபடி செய்தது.

இந்நிலையில் தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கின்போது சமஸ்கிருத மந்திரங்களை தமிழில் மொழி பெயர்க்க இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் மணிகானந்தா என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை பொதுநல வழக்காக விசாரிக்க கோரி உயர்நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன், தலைமை நீதிபதிக்கு அனுப்பிவைத்தார்.

What do you think?

மயிலுக்கு பதில் கிளி – சர்ச்சையில் சிக்கிய யோகிபாபு!

டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு வழக்கில் தலைமறைவாக இருந்த காவலர் சித்தாண்டி கைது!