தனியார் மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து எல்.ஐ.சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

எல்.ஐ.சி பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நிறுவன ஊழியர்கள் மதுரையில் பணிப் புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர்.

நாடாளுமன்றத்தில் தக்கல் செய்யப்பட 2020 – 21 பட்ஜெட்டில், எல்.ஐ.சியின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய உள்ளது குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். எல்.ஐ.சியின் பங்குகளை பொது பங்கு வெளியீடு மூலமாக விற்பனை செய்ய மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவுக்கு அந்நிறுவன ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மத்திய அரசின் இந்த பட்ஜெட் அறிவிப்பைக் கண்டித்து அதன்ஊழியர்கள், அதிகாரிகள் இன்று ஒரு மணி நேரம் வேலை நிறுத்தத்தை அறிவித்தனர். அதன்படி, மதுரை செல்லூரில் உள்ள எல்.ஐ.சி கோட்ட அலுவலக வளாகத்தில் பகல் 12 மணியளவில் எல்.ஐ.சி முகவர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதேபோல், மதுரை தல்லாகுளம் எல்.ஐ.சி கிளை அலுவலகத்திலும் ஒரு மணிநேரம் பணிப் புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது. முன்னாள் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் நன்மாறன் தலைமை வகித்த இப்போராட்டத்தில் எல்.ஐ.சி ஊழியர்களும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

What do you think?

‘ஊழலின் ஊற்றுக்கண் டி.என்.பி.எஸ்.சி’ – உதயநிதி ஸ்டாலின் சாடல்

மயிலுக்கு பதில் கிளி – சர்ச்சையில் சிக்கிய யோகிபாபு!