தமிழகத்தில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு!

இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2011ல் மக்கள்தொகை கணக்கெடுப்பு கடைசியாக நடத்தப்பட்டது.

பாத்து ஆண்டுகள் கடந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதன் படி 2021-ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 1-ந்தேதி தொடங்கி செப்டம்பர் 30-ந்தேதிக்குள்முடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .

இதில் 31 கேள்விகள் கேட்கப்படும் . முதல் 5 கேள்விகள் வீடு தொடர்புடையதாக இருக்கும்.6 மற்றும் 7-ம் கேள்விகள் அந்த வீடு வசிப்புக்கு பகுதியாக அல்லது முழுமையாக பயன்படுத்தப்படுகிறதா? என்பது பற்றியும், 8 முதல் 10-ம் கேள்விகள் வீட்டின் தலைவரை பற்றியும், 11 முதல் 31-ம் கேள்விகள் வீட்டில் இருக்கும் வசதிகள், பொருட்கள், சாதனங்கள் பற்றியதாக இருக்கும்.

மேலும், திருமணமானவர்களின் எண்ணிக்கை, குடிநீர் வசதியின் ஆதாரம் எது? எந்த வகை கழிவறை உள்ளது? குளியல் வசதி உள்ளதா? கழிவுநீர் வெளியேற்றும் வசதி உள்ளதா? கியாஸ் வசதி, இணையதள வசதி, கம்ப்யூட்டர், மடிக்கணினி வசதி, ரேடியோ, டி.வி., தொலைபேசி, செல்போன், ஸ்மார்ட் போன், இருசக்கர வாகனம், கார், ஜீப், வேன், உணவுக்கு பயன்படுத்தப்படும் முக்கிய தானியம், சமைக்க பயன்படுத்தப்படும் எரிபொருள், மின்சார வசதி ஆதாரம் ஆகிய கேள்விகளும் கேட்கப்படும்.

What do you think?

ட்விட்டரில் டிரெண்டாகும் #இலவுகாத்தகிளி_ரஜினி ஹேஷ்டேக்….!

“கொரோனா பயத்திற்கு NO சொல்லுங்கள்” பிரதமர் மோடி!