தமிழகத்தில் மதுபானங்கள் விலை உயர்வு – குடிமகன்கள் கலக்கம்!

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் விலை உயர்கிறது, இதனால் குடிமகன்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் உள்ள 5,300 மதுபான கடைகளை தமிழ்நாடு வாணிப கழகம் எனப்படும் டாஸ்மாக் நடத்தி வருகிறது. அரசின் வருவாயில் முக்கிய பங்கு வகிக்கும் மதுபான விற்பனை, பண்டிகை காலங்களில் 100 கோடிகளை கடந்து வருவாய் ஈட்டி வருகிறது. கடந்த பொங்கல் பண்டிகை தினத்தில் மட்டும் மதுபான விற்பனையால் தமிழக அரசுக்கு 600 கோடி வருவாய் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இன்று முதல் மதுபானங்களின் விலை உயர்வு அமலுக்கு வருகிறது. அதன்படி, தற்போதுள்ள குவாட்டர் விலையில் கூடுதலாக ரூ.10, ஆஃப் ரூ.20, புல் ரூ.40 கூடியுள்ளது. மதுபிரியர்களின் விருப்பமான பீர் பாட்டிலின் விலையிலும் 10 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வால் குடிமகன்கள் மிகவும் கலக்கம் அடைந்துள்ளதோடு அதிர்ச்சியும் அடைந்துள்ளனர்.

What do you think?

vaiko mp

மேற்குத் தொடர்ச்சி மலைகளைப் பாதுகாக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன?வைகோ எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு பதில்

அமைச்சர் ஜெயக்குமார் பதவி விலக வேண்டும் – மு.க.ஸ்டாலின்