February 27, 2020
Madhimugam
அரசியல் தமிழ்நாடு

தமிழகத்தில் 5, 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து

இந்தாண்டு 5, 8 ஆம் வகுப்புகளுக்கு நடைபெறுவதாக இருந்த பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

5, 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2019 – 2020 ஆம் ஆண்டு முதல் பொதுத்தேர்வு நடத்தப்படும் என 13.09.2019 அன்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டிருந்தது. இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத் திருத்தங்களின்படி 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு, தமிழகத்தில் நடப்புக் கல்வி ஆண்டு முதல் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்றும், முதல் 3 ஆண்டுகளுக்கு மட்டும் மாணவர்கள் தேர்ச்சி நிறுத்தி வைக்கப்படாது என்றும் தமிழக அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு பொதுமக்கள், கல்வியாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. பொதுத்தேர்வு நடத்தப்படுவதால் மாணவர்கள் அதிக மன அழுத்தத்திற்கு உள்ளாகலாம் என்றும், உடனடியாக மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்துவது கடினம் என்றும் கவலை தெரிவித்தனர்.

இந்நிலையில் 5, 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “5, 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுவது குறித்து பல்வேறு கோரிக்கைகள் வரப்பெற்றன. அவைகளை ஜெயலலிதாவின் அரசு கவனமுடன் பரிசீலித்து, இந்த அரசாணையை ரத்து செய்ய முடிவெடுத்துள்ளது. ஏற்கனவே உள்ள பழைய நடைமுறையே தொடரும்” என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Related posts

மீண்டும் அதிகரித்த தங்கம் விலை..!

Digital Team

புதுவை இளைஞருக்கு கொரோனா வைரஸ் உறுதி..!

Digital Team

பப்ஜி விளையாட்டில் மோகம்; பேரனே பாட்டியை கொன்ற சோகம்!

Digital Team

மனுஷ்யபுத்திரனின் விளக்கத்திற்கு நெட்டிசன்கள் பதிலடி

Digital Team

4-வது நாளாக தொடரும் சிஏஏ எதிர்ப்பு போராட்டம்

Digital Team

குளத்திற்குள் சரிந்த 8 வீடுகள்; வீட்டில் இருந்தவர்கள் உயிர் தப்பிய அதிசயம்!

Digital Team
You cannot copy content of this page
Madhimugam